ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர் பழனிசாமி... எந்த உதவியும் செய்ய அரசு தயார்..!

By vinoth kumarFirst Published Jun 5, 2020, 12:35 PM IST
Highlights

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர்களிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி  எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் குரோம்பேட்டையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே, ஜெ. அன்பழகனின் உடல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசிய முதல்வர் அரசு சார்பில்  என்ன உதவி வேண்டுமானாலும் உடனடியாக செய்யுங்கள். மேலும், தேவைப்பட்டால் தமிழக அரசில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்களை உடனடியாக ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வர் கூறியதாக தகவல் வெளியானது. 

நேற்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதில் கடந்த 24 மணிநேரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் வெளியானது. இந்நிலையில், இன்று காலை திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியத்துள்ளார். 

click me!