ரிசல்டை கேட்டு கதிகலங்கிப் போன துரைமுருகன்.. கலக்கத்தில் கழகத்தினர்..

By Ezhilarasan BabuFirst Published Apr 8, 2021, 12:30 PM IST
Highlights

துரைமுருகனுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே  துரைமுருகன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால்  அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையிலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் வீட்டில் தன்னை  தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக மகளிர் அணி செயலாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்  தனிமைப் படுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்று  தீவிரமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் அதை ஒட்டி நடந்த  பிரச்சார பொதுக்கூட்டங்களில் மக்கள் அலையலையாக திரண்டதால் கொரோனா இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவியுள்ளது. இந்நிலையில் அதை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போவதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய துரைமுருகன் கொரோனா தொற்று, கோடை வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். 85 வயதை  கடந்த அவர் ஏற்கனவே 2 டேஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் தேர்தலில் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்  தேர்தல் முடிந்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு திமுகவினர் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு அறிகுறிகள் அற்ற வகையில் வைரஸ் தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  துரைமுருகனுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே  துரைமுருகன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால்  அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!