கொரொனா ஆலோசனை... மோடியை வீடியோவில் கூட பார்த்து பேச மறுக்கும் மம்தா பானர்ஜி..!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2021, 11:22 AM IST
Highlights

பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக தலைவர்களும் பதிலுக்கு மம்தா பானர்ஜியை விமர்சித்து வருகிறார்கள். 

கொரோனா தொடர்பாக பிரதமர் நடத்தும் ஆலோசனையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் மேற்குவங்க தலைமைச் செயலாளர் கூட்டத்தில் பங்கேற்பார் என அத்தகவல் வெளியாகியுள்ளது.

 கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. இதனைத் தவிர பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக தலைமைச் செயலாளர் ஆல்பன் பண்டாபாத்யாயா கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. மேற்குவங்கத்தில் 4-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள மம்தா பானர்ஜி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக தலைவர்களும் பதிலுக்கு மம்தா பானர்ஜியை விமர்சித்து வருகிறார்கள். 
 

click me!