இந்தியாக்காரன் உள்ளே வராதே.. அதிரடியாக தடைபோட்ட தீவு நாடு...

By Ezhilarasan BabuFirst Published Apr 8, 2021, 11:15 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இந்தியாவிலிருந்து வரும் பல பயணிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.  

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூஸிலாந்து அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் கடுமையாகபாதித்துள்ளன. 

பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த சில மாதங்களாக வைரஸ் காட்டுக்குள் இருந்து வந்த நிலையில், தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ளது. இந்தியாவின் பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்த வைரஸ் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,29,28, 574 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வைரசால் நேற்று ஒரே நாளில் 688 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய பயணிகள் நியூஸிலாந்துக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இந்தியாவிலிருந்து வரும் பல பயணிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்தில் நுழைய தடை விதிக்கப்படுகிறது  என அவர் அறிவித்துள்ளார். 
 

click me!