கொரோனா நலம் விசாரிப்பு... திருமாவளவன் செல் ஸ்விட்ச் ஆப்... பதறிப்போன மு.க.ஸ்டாலின்..!

Published : Mar 28, 2020, 02:05 PM IST
கொரோனா நலம் விசாரிப்பு... திருமாவளவன் செல் ஸ்விட்ச் ஆப்... பதறிப்போன மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

அவர் நம்பரை டிரை பண்ணினேன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு” என்றார். “கொரோனா தொற்றில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருங்கள். நலம் விசாரிப்பதற்காகத்தான் போன் செய்தேன்.

கொரோனா தொற்றில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களுக்கு போன் செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரான ரவிகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில், ’’திமுக தலைவர் நலம் விசாரித்தார். இன்று காலை திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் இல்லத்திலிருந்து போன் வந்தது. தலைவர் பேசுகிறார் என இணைப்பைக் கொடுத்தனர். “ நல்லா இருக்கீங்களா? “ என்று வழக்கமான வாஞ்சையோடு கேட்டவர் ‘ திருமா எங்கே இருக்கிறார்?

அவர் நம்பரை டிரை பண்ணினேன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு” என்றார். “கொரோனா தொற்றில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருங்கள். நலம் விசாரிப்பதற்காகத்தான் போன் செய்தேன்” என்றார். தலைவரிடம் (திருமாவளவனிடம்) இந்தத் தகவலைக் கூறியதும் அவரே போன் செய்து அண்ணனிடம் நலம் விசாரித்தார்.

 

கொரோனா அச்சத்தில் எல்லோரும் மனம் கலங்கி இருக்கும்போது அண்ணன் தளபதி அவர்களின் அன்பான விசாரிப்பு தெம்பு தந்தது.  அவருக்கு என் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!