மே மாதம் இந்தியாவுக்கு காத்திருக்கிறதா ஆபத்து..?? உக்கிரத்தை காட்டும்போது பாதிப்பும் அதிகம் இருக்கும்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 17, 2020, 6:08 PM IST
Highlights

ந்த வைரஸ் ஏப்ரல் மாத இறுதியில் வரை மெல்ல மெல்ல வேகம் எடுத்து ,  மே மாதம் இடையில இந்தியாவில் தீவிரமாக மாறும் எனவும்  அப்போது பாதிப்பின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் 

இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் வரும் மே மாதம் தனது முழு உக்கிரத்தையும் காட்டும் என இந்திய உள்துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.   சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , நிலையில் உலக அளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  இதுவரை 1.45 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  அமெரிக்கா ,  இத்தாலி ஸ்பெயின் ,  பிரான்ஸ் ,  ஜெர்மனி ,  பிரிட்டன் , உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் இந்த வைரஸ் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது .

 

அமெரிக்காவில் மட்டும் 6.5 லட்சத்திற்கும்  அதிகமானோருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதுவரைக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது .அமெரிக்கா ,  இத்தாலி  , ஸ்பெயின் ,  பிரிட்டன் ,  உள்ளிட்ட நாடுகளில் தற்போது உச்ச நிலையில் உள்ள இந்த வைரஸ் தற்போது இந்தியா ,  பாகிஸ்தான் , இலங்கை ரஷ்யா ,  ஜப்பான் ,  உள்ளிட்ட நாடுகளில் மெல்ல மெல்ல வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது .  இந்தியாவில் 13 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சுமார் 448 பேர் உயிரிழந்துள்ளனர் .  மகாராஷ்டிரா ,  டெல்லி  , தமிழ்நாடு ,  ராஜஸ்தான்  , மத்திய பிரதேசம் ,  குஜராத் ,  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது .  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோறா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ,  இந்தியாவில் இந்த வைரஸ் வேகமெடுக்க  தொடங்கிவிட்டது என்பதை சுகாதாரத்துறை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.

தற்போது வரை இந்த வைரஸ் இரண்டாவது கட்டத்திலேயே உள்ளது என்றும் அது சமூகப் பரவலாக மாறவில்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறிவரும் நிலையில் ,  தற்போது வைரஸ் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இந்தியாவில் மேலும் கவலை கொள்ள வைத்துள்ளது .அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் , கடந்த ஆறு நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது . இந்த வைரஸ் ஏப்ரல் மாத இறுதியில் வரை மெல்ல மெல்ல வேகம் எடுத்து ,  மே மாதம் இடையில இந்தியாவில் தீவிரமாக மாறும் எனவும்  அப்போது பாதிப்பின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் இந்தியா சுகாதாரத்துறை அமைச்சகம் கணித்துள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.  

தற்போது சீனாவில் இருந்து  பரிசோதனை கருவிகள் வந்துள்ள நிலையில் இனி கொரோனா பரிசோதனைகளின்  எண்ணிக்கையை அதிகப்படுத்த உள்ள நிலையில் வைரஸ் உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியம் காட்டினால் ,  கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க முடியாது என்றும் இந்திய சுகாதாரத் துறை கலக்கம் அடைந்துள்ளது . தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த பிரத்தியேக மருந்து இல்லாததால் சமூக விலகல் மட்டுமே இதற்கு ஒரே தீர்வு என தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது .
 

click me!