தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Published : Jul 07, 2020, 10:22 AM IST
தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி..!

சுருக்கம்

அதிமுக- திமுக எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக- திமுக எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து அதிமுக செய்தி தொடர்பாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாரபட்சமின்றி வேட்டையாடி வருகிறது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது குடும்பத்தாருக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிமுக -திமுகவை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.,க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!