அடிதூள் அடுத்த மாதம் கொரோனாவுக்கு சமாதி... 30 கோடி தடுப்பூசிகள் தாயார்.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 21, 2020, 10:38 AM IST
Highlights

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்த கூடுமென அவர் கூறியுள்ளார்

.

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்த கூடுமென அவர் கூறியுள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் முன்பைவிட சற்று குறைந்துள்ள போதும், அது இன்னும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. 

அதேநேரத்தில் அதில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக  உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் ஒட்டுமொத்தமாக தடுக்க  உலகநாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் பாரத பயோடெக் சிரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு  மருந்துகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியாவில் தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. 

வரும் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் இந்திய மக்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது. முதற்கட்டமாக 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்கும் முதற்கட்டமாக 30 கோடி கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு தயாராக உள்ளது. அதேபோல் நாடுமுழுவதும் தடுப்பூசி போட  260 மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரம் களப்பணியார்களுக்கு தீவிர பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதில் இருந்து 97 லட்சத்துக்கும் அதிகமானோர் மீண்டுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என யாராவது முடிவு செய்தால், அவர்களை அரசு ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் தயங்குபவர்களுக்கு மருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

click me!