தேசிய தலைமை ரொம்ப பிஸியால் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம்... அண்ணாமலையின் அதிரடி..!

By vinoth kumarFirst Published Dec 21, 2020, 10:31 AM IST
Highlights

முதல்வர் வேட்பாளர் முடிவை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்று மாநிலத் தலைவர் முருகன் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

முதல்வர் வேட்பாளர் முடிவை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்று மாநிலத் தலைவர் முருகன் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

கோவை பாஜக மாநகர் மாவட்டப் பழங்குடியினர் அணியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை;- முதல்வர் வேட்பாளர் முடிவை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்று மாநிலத் தலைவர் முருகன் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 
கூட்டணியில் பாஜக மாநிலத் தலைமை எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. முக்கிய முடிவுகளை தேசியத் தலைமைதான் அறிவிக்க முடியும் என்பதைத்தான் முருகன் சொல்லி இருந்தார். புகழேந்தி உள்ளிட்ட அதிமுக நண்பர்கள் இதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்றார். 

தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரும்போது அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். பாஜக தேசிய தலைமை தொடர்ந்து, பிஸியாக இருப்பதால், அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமித் ஷா சென்னை வந்தபோது மேடையில் அதிமுக தலைவர்கள் கூட்டணி குறித்து அறிவித்தபோது, தான் கட்சித் தலைவர் கிடையாது என்பதால்தான் கூட்டணி குறித்து அவர் பேசவில்லை. கூட்டணி அமையும்போது பலமான கட்சிதான் தலைமை ஏற்கும். எது பலமான கட்சி என்பது உங்களுக்குத் தெரியும் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!