தமிழக அமைச்சர் நிலோபர்கபிலுக்கும் கொரோனா ... ! அமைச்சர்களை விடாது துரத்தும் கொரோனா.!

By T BalamurukanFirst Published Jul 17, 2020, 8:27 AM IST
Highlights

தமிழக அமைச்சர்களின் பட்டியலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில். இவர் சென்னை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். 
 

தமிழக அமைச்சர்களின் பட்டியலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில். இவர் சென்னை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலோபர் கபில் சமீபத்தில் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தார். சில நாட்களாக அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதன் காரணமாக அவர் கடந்த 14-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பிலும் இருந்து வருகிறார்.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் நிலோபர் கபில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!