அட கடவுளே... 2 டோஸ் தடுப்பூசி போட்டுகொண்ட திமுக வேட்பாளருக்கு கொரோனா...!

Published : Mar 31, 2021, 04:59 PM IST
அட கடவுளே... 2 டோஸ் தடுப்பூசி போட்டுகொண்ட திமுக வேட்பாளருக்கு கொரோனா...!

சுருக்கம்

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பன்னீர்செல்வம். தேர்தல் நெருங்கி வருவதால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த 29ம் தேதி மாலை புவனகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவருக்கு உடல் சோர்வு மற்றும் சளி தொல்லை ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

இதனையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லேசான அறிகுறிகள் இருப்பதால், பயப்பட தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரது மகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பன்னீர்செல்வம், பிப்ரவரி 17ம் தேதி கடலுார் அரசு மருத்துவமனையில், கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதனையடுத்து, மார்ச் 19ம் தேதி காட்டுமன்னார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகும் கொரோனா பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!