இரண்டு மணி நேரத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா... திமுக-அதிமுக என பாரபட்சம் காட்டாமல் தாக்கும் கொடூரம்..!

Published : Jul 02, 2020, 03:08 PM IST
இரண்டு மணி நேரத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா... திமுக-அதிமுக என பாரபட்சம் காட்டாமல் தாக்கும் கொடூரம்..!

சுருக்கம்

காலையில் ஒருவருக்கு, மாலையில் இருவருக்கு என எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவது எம்.எல்.ஏக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. 

காலையில் ஒருவருக்கு, மாலையில் இருவருக்கு என எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருவது எம்.எல்.ஏக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. 

இன்று பரமக்குடி எம்.எல்.ஏ  சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்து உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி எம்.எல்.ஏ  சதன் பிரபாகரனுக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி, மகன், உதவியாளருக்கும் கொரோன உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சித் தகவலை அடுத்து உளுந்தூர் பேட்டை அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவுக்கும் கோரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குமரகுரு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்தம் 8 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா தொற்று உறுதி. ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
முதன்முறையாக திமுக சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அடுத்து ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்,  செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு, செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ மஸ்தான்,  பாலக்கோடு அமைச்சர் கே.பி.அன்பழகன், பரமக்குடி சதன் பிரபாகரன், உளுந்தூர் பேட்டை குமரகுரு, ஸ்ரீபெரும்புதூர் பழனி ஆகியோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற எம்.எல்.ஏ.,க்கள் கலக்கமடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!