ப.சிதம்பரத்தின் கையில் கொரோனா டீம் அடித்த சீல்... கலங்கிபோன கதர்சட்டைகள்..!

By Thiraviaraj RMFirst Published May 26, 2020, 12:21 PM IST
Highlights

உடனே சிதம்பரம் நான் என்னை 14 நாட்கள் நிச்சயமாக என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். உங்களின் சேவைக்கு நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சிதம்பரம் போலவே அவருடன் அந்த விமானத்தில் வந்திருந்த மற்ற பயணிகள் அனைவருக்கும் சீல் இடப்பட்டது இப்படி.
 

கொரோனா காலத்திலும் கூட மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டும், தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டும், சுகாதார நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான பார்வையில் கருத்து தெரிவித்துக் கொண்டும் இருக்கிறார் ப.சிதம்பரம். இதனால் பா.ஜ.க.வின் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார் சிதம்பரம்.

இப்பேர்ப்பட்ட சிதம்பரம் இத்தனை நாட்களாக தனது டெல்லி இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று உள்நாட்டு விமான சேவைகள் துவங்கிவிட்ட நிலையில், டெல்லியிலிருந்து 1:50 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.

வந்திறங்கிய ப.சிதம்பரத்தை பரிசோதித்த கொரோனா தடுப்பு டீமினர், அவருக்கு அடிப்படை செக்-அப் செய்த பின், அவரது கையில் சீல் (முத்திரை) வைத்தனர். இது எதற்கு? என்று சிதம்பரம் கேட்டபோது, உங்களுக்கு நோய் தொற்று எதுவும் இல்லையென்றாலும் கூட நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்! அதற்கான சீல் இது என்றனர்.

உடனே சிதம்பரம் நான் என்னை 14 நாட்கள் நிச்சயமாக என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். உங்களின் சேவைக்கு நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சிதம்பரம் போலவே அவருடன் அந்த விமானத்தில் வந்திருந்த மற்ற பயணிகள் அனைவருக்கும் சீல் இடப்பட்டது இப்படி.

இந்த நிலையில், சிதம்பரத்தின் கையில் கொரோனா தடுப்பு டீமினர் சீல் வைக்கும் போட்டோவானது சமூக வலைதளங்களில் வெளியானதும், அதன் காரணம் மிக சாதாரணது என்பதை புரிந்து கொள்ளாமல், தமிழக காங்கிரஸில் சிதம்பரம் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் பதறி, கவலை கொண்டுவிட்டனர். அவர்கள் தொடர்ந்து சிதம்பரத்தின் அலுவலகத்துக்கு போன் செய்து கேட்க, அவர்களுக்கு உரிய விளக்கம் தரப்பட்ட பின்னரே ஆசுவாசப்படுகின்றனர். 

click me!