டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி.? நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை. தயார் நிலையில் டாக்டர்கள் டீம்

By T BalamurukanFirst Published Jun 8, 2020, 10:05 PM IST
Highlights

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்படுவதாகவும், நாளை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்படுவதாகவும், நாளை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் இதுவரை 28,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 812 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து முதல்வர் கெஜ்ரிவால் நேற்று ஆன்லைன் மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இன்று முதல் மாநில எல்லைகள் திறக்கப்படுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் டெல்லி மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று முதல் கொரோனா அறிகுறிகள் காணப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.. அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காணப்படுவதாகவும், நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் செல்போன் மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதாகவும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் குறையவில்லை என்றால் நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அனைத்து ஆலோசனை கூட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!