கொரோனா பீதி.. 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்...ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2021, 2:42 PM IST
Highlights

"வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிக்கேற்ப அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 6-ம் வகுப்பு முதலே மடிக்கணினி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடை 15 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும். 

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் கூறுகையில், 

"வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிக்கேற்ப அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 6-ம் வகுப்பு முதலே மடிக்கணினி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடை 15 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும். நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்கு 55 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை விடுவிக்க பள்ளி கல்வித்துறை ஆவண செய்ய வேண்டும். 

ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை திரும்பப் பெற்று பழைய வயது வரம்பு முறையே தொடர்ந்திட வேண்டும், மற்றும் மருத்துவக்காப்பீடு திட்டத்தில் மத்திய அரசுபோல் அனைத்து நோய்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கவும், ஆசிரியர் பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி வழங்கவும், புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை த் தொடர்ந்திடவும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

click me!