கொரோனாவுக்கு மருந்து ரெடி.. அசத்தும் சித்தமருத்துவம்.. மகிழ்ச்சியில் மக்கள்.!!

By T BalamurukanFirst Published Jun 30, 2020, 10:53 PM IST
Highlights

கண்டுபிடித்துள்ள "இம்ப்ரோ" மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

கொரோனா இந்த வார்த்தையை கேட்டாலே இப்ப எல்லாருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு கொரோனா வீரியம் சமூக தொற்றாக பரவி பலரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் கோயம்பேடு கிளஸ்டர் போய் சென்னை கிளஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து பரவி வருகிறது. இதுவரைக்கு தமிழகத்தில் 90167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 60பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆக மொத்தம்1201 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய "இம்ப்ரோ" என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மருத்துவர்.சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்திருந்தார். டெங்கு காய்ச்சல் வந்த போது தமிழக மக்களுக்கு கை கொடுத்தது  நிலவேம்பு பொடி .  சித்த மருத்துவம் கண்டுபிடித்த நிலவேம்பு கசாயத்தை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அன்றைக்கு புயல்வேகத்தில் எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் டெங்குக்கு பலியாவோர் எண்ணிக்கை முற்றிலும் குறைக்கப்பட்டது. மக்கள் கூடும் இடங்கள் கிராமங்கள்  நகரங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள் என  அனைதது இடங்களிலும் இந்த கசாயம் வழங்கப்பட்டது. இன்றைக்கும் அலோபதி மருத்துவர்கள் கூட டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிங்கள் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கண்டுபிடித்துள்ள "இம்ப்ரோ" மருந்தை ஆய்வு செய்வதற்காக சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, அலோபதி மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த சுழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில், மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்துள்ள புதிய சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மனுதாரர் தயாரித்துள்ள மருந்தில் கலக்கப்பட்டுள்ள சேர்க்கையின் அறிவியல் பின்னணியை ஆய்வு செய்தபோது அதில் கிருமிகளை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது மேல் நடவடிக்கைக்காக இம்ப்ரோ மருந்து மத்திய ஆயுர்வேதம் சித்த ஆராய்ச்சி கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
 

click me!