கொரோனா தொற்று படிப்படியாக குறைத்துள்ளது.. இது திமுக ஆட்சியின் சாதனை.. அடித்து தூக்கிய அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published May 31, 2021, 10:44 AM IST
Highlights

மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதியைப் பெறலாம் என்றார மேலும் . கொரோனா தொற்று படிப்படியாக குறைத்துள்ளது இது திமுக ஆட்சியின் சாதனை என அமைச்சர் கூறினார். 
 

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வந்த நிலையில் அரசின் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் தொற்று சுமார் 37 மாவட்டங்களில் பாதியாக சரிந்துள்ளது. அதேபோல் சென்னையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவில் இருந்து குணமடைவோரின்  எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.  தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நல்ல பலனை கொடுத்துள்ளது, நாளொன்றுக்கு சென்னையில் மட்டும் சராசரியாக 7 ஆயிரத்துக்கும் அதிகமாக நோய்த்தொற்று பதிவாகி வந்த நிலையில், தற்போது நோய்த்தொற்றின் எண்ணிக்கை சென்னையில் 2762 ஆக குறைந்துள்ளது. 

இது தமிழக அரசுக்கும், மக்களுக்கும் மிகப் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. மேலும் ஒரு வார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் சென்னை ஓட்டேரியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அத்தியாவசிய பொருட்களை வாகங்னங்கள் மூலம் வீடு தேடி சென்று விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் வடசென்னை எம்.பி. கலநிதி வீராசாமி, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 7500 நடமாடும் மளிகை கடைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது, தற்போது வரை 2197 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் நடமாடும் மளிகைக் கடைகள் செயல்பாட்டுக்கு வருகிறது. மாநகராட்சியில் பதிவு செய்தவர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும், நடமாடும் கடைகளைத் துவக்க விரும்புவோர், மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதியைப் பெறலாம் என்றார மேலும் . கொரோனா தொற்று படிப்படியாக குறைத்துள்ளது இது திமுக ஆட்சியின் சாதனை என அமைச்சர் சேகர்பாபு கூறினார். 
 

click me!