கொரோனா பாதிப்பா.? என் நேரமும் மந்திராலயா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அஜித்பவார் சட்டசபையில் கிண்டல்

By Thiraviaraj RMFirst Published Mar 14, 2020, 9:12 AM IST
Highlights

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி மத்தியபிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு அமைந்துள்ள சட்டசபையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் அங்கே சட்டசபை கூடியிருக்கிறது

T.Balamurukan

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி மத்தியபிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு அமைந்துள்ள சட்டசபையில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் அங்கே சட்டசபை கூடியிருக்கிறது.சபையில் அரசியல் விவாதங்கள் அனல் பறந்தன.

துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான அஜித் பவார் சட்டசபையில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்...,
"ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இல்லை. பாஜக, தற்போது சட்டசபையில் இல்லாத அவர்களின் எம்.எல்.ஏ.க்களை கவனமாக பார்த்து கொள்வது நல்லது" என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய "சுதீர் முங்கண்டிவார்", பா.ஜனதா, சிவசேனாவை புறந்தள்ளிவிட்டதாக நான் வேடிக்கையாக கூறினேன். ஆனால் நான் கூறியது அஜித் பவாருக்கு பொருந்தியதால், அவர் அதை பயன்படுத்தி கொண்டார்" என்றார் கிண்டலாக  கொரோனா வைரசில் உலகம் முழுவதும் ஆட்டிப்படைப்பதால் அதில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு எம்.எல்.ஏ.க்களிடம் அஜித் பவார் கேட்டுக் கொண்டார். எம்.எல்.ஏ.க்கள் கொரோனா பாதிப்பு தொடர்பாக எந்த நேரமும் மந்திராலயா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்று பதிலுக்கு கிண்டலடித்தார்.
 

click me!