மு.க. ஸ்டாலினுக்கு ரூட் கிளியர்... ரஜினி முடிவால் நொந்து நூடூல்ஸான மன்ற மா.செ.க்கள்!

By Asianet TamilFirst Published Mar 14, 2020, 9:09 AM IST
Highlights

ரஜினி அளித்த பேட்டி, திமுகவினரை உற்சாகமாக்கியுள்ளது. தான் முதல்வராகமாட்டேன் என்று சொன்னதன் மூலம் போட்டியிலிருந்து ரஜினியே விலகிவிட்டார். தமிழகத்தில் யார் முதல்வர் என்பதைப் பார்த்து வாக்களிப்போர்தான் மிக அதிகம். அந்த வகையில் ரஜினி போட்டியிலிருந்து விலகியதால், திமுகவுக்கு குஷி ஏற்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களே அதை வழிமொழிந்து பேசியது தெரியவந்துள்ளது.
 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ரூட் கிளியர் ஆகிவிட்டதாக ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களே பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுக எளிதாக தேர்தலில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக அதிமுக ஊரக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தும்கூட திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது படையும் இருக்கும்; போர் வரும்போது களமிறங்குவோம் என்று ரஜினி சொன்னது முதல் திமுக சற்று கிலியானது. ரஜினியைப் பற்றி விமர்சிக்கக்கூட தயங்கியது.


ரஜினி கட்சித் தொடங்கிய பிறகு கருத்து சொல்கிறோம் என்பதே ரஜினி பற்றி திமுகவின் கருத்தாக இருந்தது. அதேவேளையில் ரஜினியின் ஒவ்வொரு மூவ்வையும் திமுக தீவிரமாகக் கண்காணித்துவந்தது. ரஜினியால் தேர்தலில் என்ன விளைவு ஏற்படும் என்பதை திமுக தொடர்ந்து கவனித்துவந்தது. ரஜினியை ஆதரிப்பவர்களும் வரும் தேர்தலில் போட்டி ஸ்டாலினா - ரஜினியா என்றே இருக்கும் என்றும் பேசிவந்தார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரஜினி அளித்த பேட்டி, திமுகவினரை உற்சாகமாக்கியுள்ளது. தான் முதல்வராகமாட்டேன் என்று சொன்னதன் மூலம் போட்டியிலிருந்து ரஜினியே விலகிவிட்டார். தமிழகத்தில் யார் முதல்வர் என்பதைப் பார்த்து வாக்களிப்போர்தான் மிக அதிகம். அந்த வகையில் ரஜினி போட்டியிலிருந்து விலகியதால், திமுகவுக்கு குஷி ஏற்பட்டுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களே அதை வழிமொழிந்து பேசியது தெரியவந்துள்ளது.


சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி பிரஸ் மீட் முடிந்த பிறகு, அங்கே பத்திரிகையாளர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களும் பங்கேற்றனர். அப்போது பேசிய ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களில் பலர், “ஸ்டாலினுக்கு ரூட் கிளியர் ஆகிவிட்டது. தலைவரே அதை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார்” என்று பலரும் பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளனர். மேலும், “இனி நம் வேலையைப் பார்க்க வேண்டியதுதான்” என்றும் பல மா.செக்கள் பத்திரிகையாளார்களிடம் நொந்தும்கொண்டனர். 

click me!