மருத்துவமனையில் இறந்தால் மட்டுமே கொரோனா மரணமாக பதிவு..? பொது சுகாதாரத் துறை இயக்குனர் பகீர்.

Published : Jun 26, 2021, 09:50 AM IST
மருத்துவமனையில் இறந்தால் மட்டுமே கொரோனா மரணமாக பதிவு..? பொது சுகாதாரத் துறை இயக்குனர் பகீர்.

சுருக்கம்

தமிழகத்தில் தினசரி ஏற்படும் கொரோனோ  மரணங்கள் மறைக்கப்படுவதில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.  

தமிழகத்தில் தினசரி ஏற்படும் கொரோனோ  மரணங்கள் மறைக்கப்படுவதில்லை என பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.  

உலகம் முழுவதும் கொரோனோ பெருந்தொற்று காலத்தில் கூடுதல் இறப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று அந்த வகையில் அனைத்து இறப்புகளும் சரியாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும்  மருத்துவமனைகளில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கொரோனோ மரணங்களாக பட்டியலிடுவதாகவும். 

வீட்டு சிகிச்சையில் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளில் கொரோனோ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவை கோவிட் மரணங்கள் ஆகவும்  , நோய்தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்படாத அல்லது அறிகுறி  உள்ள நோயாளிகள் மரணங்கள் Suspected மரணங்கள் ஆகவும், ஐ சி எம் ஆர் வழிகாட்டுதல் படி பட்டியலிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக வீட்டு சிகிச்சையில் ஏற்படக்கூடிய மரணங்களில் பெரும்பாலானவை கொரனோ தொற்று உறுதி செய்ய முடியாத மரணங்கள் ஆக காணப்படுகிறது.அவ்வாறு ஏற்படக்கூடிய மரணங்களில் மருத்துவர்கள் பட்டியலிட முடியாத சூழல் இருப்பதாகவும் குறிப்பிட்ட இந்த வகையான சுகாதாரத்துறையின் பார்வைக்கு பெரும்பாலும் வருவதில்லை. எனவே மருத்துவமனைகள் தவிர்த்து பிற மரணங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பதிவு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!