தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மறைக்கப்படுகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Jun 15, 2021, 4:52 PM IST

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஒருவர் மரணிக்கும் தறுவாயில், அதற்கு என்ன நோய் காரணமாக இருந்ததோ அதைத்தான் சான்றிதழில் குறிப்பிட முடியும். இந்த நடைமுறை தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முதல் அலையிலும்கூட இதைத்தான் கூறியுள்ளனர்.


ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஒருவர் மரணிக்கும் தறுவாயில், அதற்கு என்ன நோய் காரணமாக இருந்ததோ அதைத்தான் சான்றிதழில் குறிப்பிட முடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. நானும், சுகாதாரத்துறைச் செயலாளரும் இதுவரை 23 மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளோம். அப்போது கொரோனா தொற்றால் ஏற்படும் ஒரு மரணத்தைக்கூட மறைக்கக் கூடாது என ஆட்சியர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் சிகிச்சையில் சேரும்போது பாசிட்டிவ் ஆக இருக்கும். 7 நாட்களில் அது, நெகட்டிவ் ஆக மாறிவிடும்.

Tap to resize

Latest Videos

undefined

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி ஒருவர் மரணிக்கும் தறுவாயில், அதற்கு என்ன நோய் காரணமாக இருந்ததோ அதைத்தான் சான்றிதழில் குறிப்பிட முடியும். இந்த நடைமுறை தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த முதல் அலையிலும்கூட இதைத்தான் கூறியுள்ளனர். தமிழகத்தில் நேற்றுவரை 1.10 கோடி கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1.05 கோடி பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.16 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றையும் பிரித்துக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு 45,000 எண்ணிக்கை அளவுக்கு ஆம்போடெரிசின் மருந்துகள் தேவை எனக் கேட்டுள்ளோம். இதுவரை மத்திய அரசிடம் இருந்து 11,796 ஆம்போடெரிசின் மருந்துகள் வரப்பெற்றுள்ளன. அவற்றில் நோயாளிகளுக்கு அளித்ததுபோக 4,366 கையிருப்பில் உள்ளன. கருப்புப் பூஞ்சை பாதிப்பால் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

click me!