கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது.. அதிர்ச்சித்தகவலை வெளியிட்டது ஐசிஎம்ஆர்.!

By T BalamurukanFirst Published Jul 20, 2020, 9:52 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமூக பரவலாக மாறிவிட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளது மக்கள் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமூக பரவலாக மாறிவிட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளது மக்கள் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறன்றது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒருநாளில் கொரோனா புதிய பாதிப்புகள் 38 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கு அதிகமான பாதிப்புகள் கண்டறிப்பட்டு வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர்... "வி.கே. மோங்கோ, கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 30 ஆயிரத்தை கடந்துள்ளது மோசமான நிலைமை என வருத்தம் தெரிவித்துள்ளார்.  ஆரம்பத்தில் நகரங்களில் மட்டுமே வேகமாக பரவி வந்த கொரோனா தற்போது கிராமங்களிலும் வேகமாக பரவி வருகிறது.அவர், நினைத்ததை விட வேகமாக பரவும் கொரோனா தற்போது சமூக பரவல் நிலையை எட்டி விட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.இந்திய மருத்துவ கவுன்சில் இவ்வாறாக கூறியிருந்தாலும் மத்திய அரசு சமூக பரவல் என்று அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!