அரசும், மக்களும் சேர்ந்தால் கொரோனா மட்டுமல்ல எந்த நோயையும் வெல்ல முடியும்.. முதல்வர் ஸ்டாலின் சரவெடி..!

By vinoth kumar  |  First Published May 30, 2021, 6:54 PM IST

கோவை மட்டுமல்ல, எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான். திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை. கொரோனா தடுப்பு பணியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


கோவை மட்டுமல்ல, எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான். திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை. கொரோனா தடுப்பு பணியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினர். பின்னர், கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நீலகிரி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் பேசினேன். டாக்டர்கள், நர்சுகளுடன் ஆலோசனை நடத்தினேன். கவச உடை அணிவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த உடை அணிந்து டாக்டர்கள், நர்சுகள் வேலை பார்ப்பது பாராட்டதக்கது. அவர்களுக்கு நம்பிக்கை, உற்சாகத்தை ஊட்ட வேண்டும் என்பதற்காக அந்த உடை அணிந்து ஆய்வை மேற்கொண்டேன்.

Latest Videos

undefined

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் கோவை, திருப்பூரில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை விட கோவையில் கொரோனா தொற்று அதிகம்   பதிவானாலும் கடந்த 2 நாட்களாக குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 36,000 என்ற அளவிலேயே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. 

கோவை புறக்கணிக்கப்படுவதாக சிலர் கூறுகின்றனர். இதற்கு, நான் அரசியல் ரீதியாக கருத்து கூறவிரும்பவில்லை. கோவை மட்டுமல்ல, எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான். திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை. கொரோனா தடுப்பு பணியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையை அடுத்து கோவையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் ஆக்ஸிஜன், படுக்கை தட்டுப்பாடு இல்லை. ஒரு நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 1.07 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. அதிகளவு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைள் உருவாக்கி உள்ளோம். இன்னும் கூடுதல் வசதிகளை உருவாக்கி வருகிறோம். பொது மக்கள் முழு ஊரடங்கை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார். 

மேலும், கோவையில் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் 2 இடங்களில் சிறப்பு சித்தா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் இதுவரை 5.85 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகளவில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை உருவாக்கியுள்ளோம். அரசும், மக்களும் சேர்ந்தால் கொரோனா மட்டுமல்ல எந்த நோயையும் வெல்ல முடியும். தேவைப்பட்டால் இன்னும் 2 நாட்களுக்கு பிறகு கூட கோவை வருவேன். கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை வேகப்படுத்த அமைச்சர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

click me!