கொரோனாவால் முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழப்பு... அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!

Published : Jun 17, 2020, 11:55 AM ISTUpdated : Jun 17, 2020, 02:03 PM IST
கொரோனாவால் முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழப்பு... அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!

சுருக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தான் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 14 நாட்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது. நேற்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 919 பாதிக்கப்பட்டனர். 

இதனையடுத்து, சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  34, 245ஆக உயர்ந்துள்ளது. இதில், 18.000 மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 522 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கடுமையான காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 2 நாட்கள் முன்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவலுக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழந்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு