’விட்டுடுங்க ப்ளீஸ்...’ கெஞ்சிக் கூத்தாடும் ஆசிரியர்கள்... அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் பள்ளிக்கல்வித்துறை..!

By Thiraviaraj RMFirst Published Feb 5, 2019, 12:12 PM IST
Highlights

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை அவ்வளவு எளிதாக பள்ளிக்கல்வித்துறை விட்டுவிடாது போல் தெரிவிகிறது. போராட்டம் முடிந்து பல நாட்கள் ஆண நிலையில் அவர்கள் மீது அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகிறது தமிழக அரசு. 

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை அவ்வளவு எளிதாக பள்ளிக்கல்வித்துறை விட்டுவிடாது போல் தெரிவிகிறது. போராட்டம் முடிந்து பல நாட்கள் ஆண நிலையில் அவர்கள் மீது அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகிறது தமிழக அரசு. 

இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை  விவரங்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. மாவட்ட வாரியாக எந்தெந்த ஆசிரியர்கள் எத்தனை நாள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் என்ற விவரம் கோரப்பட்டுள்ளது. 22 முதல் 30ம் தேதி வரை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறையின் EMISL என்கிற இணையதளத்தில் அவர்களது விபரங்கள் வெளியிடப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வருகின்றனர். தலைமைச் செயலகம் சென்று அமைச்சர் ஜெயக்குமார், செங்கோட்டையன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளர் சொர்ணா, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரை சந்தித்து நடவடிக்கையை கைவிடும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ‘’ 8 நாட்களாக நடந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் வேலை நிறுத்தப் போராட்டம் 30ம் தேதியுடன் முடிக்கப்பட்டது. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு பிரச்னைகளை அதிகாரிகள் மூலம் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் ஜனவரி மாதம் 21ம் தேதி வரை பணியாற்றிய பள்ளியில் சேர அனுமதிக்காமல் வேறு பள்ளிக்கு மாறுதல் என்று சொல்லி பணியில் சேர அனுமதிக்கவில்லை. புனையப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர்க்க மறுக்கும் நிலை உள்ளது. தற்காலிக பணி நீக்கம் என்று சொல்லி பணியில் சேர்க்க மறுக்கின்றனர். ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதாக கூறியும் மறுக்கின்றனர். எனவே, பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு மாறுதல் பணியிட உத்தரவு வழங்குவதை முற்றிலுமாக கைவிட வேண்டும், மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அதையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

எங்களின் நியாயமான கோரிக்கை மீதுதான் போராட்டம் நடத்தினோம் என்ற அடிப்படை நியாயங்களை முதல்வர் மறுக்காமல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறனர்’’ என வேதனை தெரிவிக்கின்றனர்.  

click me!