நீட் மசோதாவை காலம் தாழ்த்தும் ஆளுநர்...! முதலமைச்சர் திடீர் சந்திப்பு...?

Published : Mar 15, 2022, 09:40 AM ISTUpdated : Mar 15, 2022, 09:44 AM IST
நீட் மசோதாவை காலம் தாழ்த்தும் ஆளுநர்...! முதலமைச்சர் திடீர் சந்திப்பு...?

சுருக்கம்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார்.

நீட் தேர்வு மசோதா நிராகரிப்பு

மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதன் காரணமாக ஏழை,ஏளிய மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசுபள்ளி மாணவர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ படிப்பில் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இருந்த போதும் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து திமுக தலைமையிலான அரசு சட்டபேரவையில் மீண்டும் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவும் மீது விளக்கம் கேட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசிற்கு ஆளுநர் திருப்பி அனுப்பிவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி  ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் முடிவில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா பிப்ரவரி 8 ஆம் தேதி நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றி 1 மாத காலத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் இந்த மசோதா மீது அளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார். இதற்கிடையே தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்று சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது.

ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர்

இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை ஆர்.என்.ரவியை இன்று மதியம் சந்திக்கவுள்ளார். அப்போது நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க கோருவார்  என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் தமிழகத்தில் உள்ள சட்ட ஒழுங்கு  பிரச்சனை, கொரோனா பாதிப்பு நிலவரம்,பட்டெஜட் கூட்டத்தொடர்  தொடர்பாகவும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரோடு ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?