TamilNadu Local Body Election: கோவையில் கலவரத்தை ஏற்படுத்த சதி... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்!!

Published : Feb 18, 2022, 06:09 PM IST
TamilNadu Local Body Election: கோவையில் கலவரத்தை ஏற்படுத்த சதி... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்!!

சுருக்கம்

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் ஏற்படுத்த சதி நடக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் ஏற்படுத்த சதி நடக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தவும், பாதுகாப்பிற்கு துணை இராணுவத்தை வரவழைக்க கோரியும், அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் வெளியூர் திமுகவினரை வெளியேற்றக் கோரியும், அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அதிமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் ஏற்படுத்த சதி நடக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கொறடா வேலுமணிக்கு பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக மிரட்டல் விடுத்த திமுகவினருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக குண்டர்களை வெளியேற்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கோவையில் ரவுடிகளை வெளியேற்ற எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவையில் ரவுடிகளுக்கு ஆதரவாக மாநகர காவல்துறை செயல்படுவது கண்டனத்துக்குரியது. கோவையில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது பிரச்சனை உண்டாக்கித் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய நினைக்கும் தி.மு.க.வின் எண்ணம் பலிக்காது. கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் ஏற்படுத்த சதி நடக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!