இந்துக்களை ஓநாய்களிடம் தூக்கி எறிந்த காங்கிரஸ்... ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு..!

Published : Dec 10, 2019, 05:26 PM IST
இந்துக்களை ஓநாய்களிடம் தூக்கி எறிந்த காங்கிரஸ்... ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

இந்தியாவை மதத்தின் அடிப்படையில் வெட்டிப் பிளந்த காங்கிரஸ் இன்று கூச்சலிடுகிறது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும் என்று தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா, ‘’இந்தியாவை மதத்தின் அடிப்படையில் வெட்டிப் பிளந்த காங்கிரஸ் இன்று கூச்சலிடுகிறது. 1947 லிருந்து இன்று வரை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் கொல்லப்பட்ட, கற்பழிக்கப்பட்ட, மதம் மாற்றப்பட்ட, அங்கிருந்து இந்தியாவிற்கு விரட்டியடிக்கப் பட்ட இந்துக்கள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் மற்றும் கால்டுவெல் புத்திரர்கள் தயாரா? மத்திய அரசின் சரியான நடவடிக்கையை எதிர்ப்பது அரசியல் மோசடி செயல். 

இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கொடுமை படுத்தப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட அகதிகள். ஆனால் முஸ்லீம்கள் ஊடுருவல்காரர்கள். இந்த உண்மையை 1947ல் இந்துக்களை ஓநாய்களிடம் தூக்கி எறிந்த காங்கிரஸ் மறைக்கப் பார்க்கிறது. மேலும் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆன கதியே மகாராஷ்டிரத்தில் மதசார்பற்ற சிவசேனாவிற்கு ஏற்படும்’’எனத் தெரிவித்துள்ளார். 

 


 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!