கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: 124 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே.!!

By Raghupati R  |  First Published Mar 25, 2023, 9:14 AM IST

கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. வரும் மே மாதம் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. 

இன்னும் ஓட்டுப்பதிவு தொடர்பான தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் அங்கு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணியை தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்றால் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

Latest Videos

ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், கர்நாடக தேர்தலையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது. பாஜகவின் ஆட்சி நடைபெறும் ஒரே தென்மாநிலம் கர்நாடகம் தான் என்பதால் இங்கு ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக பாஜக இருந்து வருகிறது.

பாஜகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. ஜேடிஎஸ் கட்சி சார்பில் 90க்கும் அதிகமான தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து கர்நாடகாவில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். 

முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். கோலார் தொகுதியை கேட்டிருந்த நிலையில் சித்தராமையாவுக்கு வருணா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 124 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்

இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?

click me!