கடல் முதல் ஆகாயம் வரை அனைத்திலும் ஊழல்... காங்கிரஸை காய்ச்சி எடுத்த மோடி..!

Published : Feb 10, 2019, 05:23 PM IST
கடல் முதல் ஆகாயம் வரை அனைத்திலும் ஊழல்... காங்கிரஸை காய்ச்சி எடுத்த மோடி..!

சுருக்கம்

இந்தியாவை இத்தனை வருடம் ஆண்ட காங்கிரஸ் கடல் முதல் ஆகாயம் வரை ஊழல் செய்துள்ளது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவை இத்தனை வருடம் ஆண்ட காங்கிரஸ் கடல் முதல் ஆகாயம் வரை ஊழல் செய்துள்ளது என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடி அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக 2-வது முறையாக தமிழகம் வந்துள்ளார். இந்த அரசு விழாவில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து சென்னை டிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ வழித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து பெருமாநல்லூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 2 பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காவில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது, இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நடுத்தர மக்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வளமாக இருப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான அரசு, பாஜக அரசு என்றார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ராணுவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த விதமான பயனும் ஏற்படவில்லை. கடல் தொடங்கி ஆகாயம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர். 

 

புரோக்கர் ஆட்சியை காங்கிரஸ் நடத்திக் கொண்டு இருந்தது என்று மோடி கடுமையாக சாடினார். ஊழலுக்கும் தவறான செயலுக்கும் முடிவு கட்டியுள்ளது பாஜக. இது போன்ற அரசை தான் காமராஜர் விரும்பினார். தாம் ஒருவர் மட்டுமே அறிவாளி என நினைக்கிறார், மறு எண்ணிக்கை அமைச்சர் என ப.சிதம்பரம் குறித்து பிரதமர் மோடி மறைமுக தாக்கியுள்ளார். அதனால் தான் அவர்களை தோற்கடித்தார்கள், மீண்டும் மீண்டும் தோற்கடித்துக்கொண்டே இருப்பார்கள் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!