மத்திய அரசுக்கு சோனியா காந்தியின் சுளீர் கேள்வி! காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சிங்கின் அதிரடி உத்தரவு

By karthikeyan VFirst Published May 6, 2020, 5:03 PM IST
Highlights

மே 17ம் தேதிக்கு பிறகு மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? ஊரடங்கை எப்போது முடிப்பது என்பதை எதனடிப்படையில் தீர்மானிக்கப்போகிறது? என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை எட்டப்போகிறது. இதுவரை 1695 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

கொரோனாவை தடுப்பதற்காக மே 17ம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமலில் இருந்தது. பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்போதும் கொரோனா கட்டுக்குள் வராததால் மே 17ம் தேதி வரை மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கால் சமூக, பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியதால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பையும் பாதிப்பிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளை எடுப்பதுடன் அதற்கான அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கியும் அறிவித்துவருகின்றன. 

மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. பாதிப்பு கட்டுக்குள் வருவதாயில்லை. தெலுங்கானாவில் ஏற்கனவே மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன், அக்கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். 

அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, மே 17ம் தேதிக்கு பிறகு என்ன? அதன்பின்னர் என்னை செய்யப்போகிறது மத்திய அரசு? ஊரடங்கை நீட்டிப்பதை மத்திய அரசு எதனடிப்படையில் தீர்மானிக்கிறது? ஊரடங்கில் இருந்து எப்படி திரும்பப்போகிறோம் என்பதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

இதையடுத்து பேசிய முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், சோனியா காந்தி ஜி சொன்னதை போல, ஊரடங்கிற்கு பின் என்ன நடக்கப்போகிறது? மத்திய அரசின் திட்டம் என்ன? என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மாநில முதல்வர்கள், மத்திய அரசின் திட்டம் குறித்து கேட்டறிய வேண்டும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
 

click me!