காங்கிரஸ் எம்.பி வசந்த் அண்ட் கோ வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Published : Aug 11, 2020, 10:54 AM IST
காங்கிரஸ் எம்.பி வசந்த் அண்ட் கோ வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சுருக்கம்

வசந்த் அண்ட் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

வசந்த் அண்ட் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போரிடும் முன்கள வீரர்களான, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள் என பல தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. மேலும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என பாகுபாடின்றி அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் கள், எம்.பிக்கள் என பலருக்கு கொரோனா உறுதியானது. அவர்களில் ஒரு சிலர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இன்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவர் தனது மனைவியுடன் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் இருவருக்குமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி