ராஜஸ்தானில் வெளுத்து வாங்கும் காங்கிரஸ் !! முதல் கட்டமாக 14 தொகுதிகளில் முன்னிலை !!

Published : Dec 11, 2018, 08:27 AM IST
ராஜஸ்தானில் வெளுத்து வாங்கும் காங்கிரஸ் !! முதல் கட்டமாக  14 தொகுதிகளில் முன்னிலை !!

சுருக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சி அங்கு முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7ம்  தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

இதில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.  மாநிலத்தில் மொத்தம் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு  உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.

 

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது அந்த கட்சிகளை உற்சாகமயைச் செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!