காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.!

Published : Jul 30, 2020, 10:41 PM IST
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு. டெல்லி மருத்துவமனையில் அனுமதி.!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி இரவு 7 மணியளவில், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி இரவு 7 மணியளவில், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 கடந்த பிப்ரவரி மாதம், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தகவல் வெளியான நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே சோனியா மருத்துவமனைக்கு வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

டெல்லி கங்கா ராம் மருத்துவமனையின் நிர்வாகக் குழுத் தலைவர் மருத்துவர் டி.எஸ். ராணா வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்

"கங்கா ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் உள்ளார் முன்னதாக, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் சோனியா காந்தி இன்று பங்கேற்றார். 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!