ஊழலில் ஊறி திளைத்த அதிமுகவினர்... நீங்க செய்யுறதெல்லாம் சட்டவிரோதம்.. அதிமுக அரசு மீது கே.எஸ்.அழகிரி கோபம்!

By Asianet TamilFirst Published May 23, 2020, 8:33 PM IST
Highlights

திமுக அமைப்பு செயலாரும், மாநிலங்களை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கட்சி அரங்குகளில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் சர்ச்சையை எழுப்பி, அதையொட்டி அடிப்படை ஆதாரமற்ற பொய் வழக்கை ஜோடித்து கைது செய்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
 

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஊழலில் ஊறி திளைத்த அதிமுக ஆட்சியாளர்களின் முகமூடியை ஆர்.எஸ். பாரதி கிழித்தெறிந்ததால், இவரது செயல்பாடுகளை முடக்கி, மன உளைச்சல் ஏற்படுத்த அவர் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.


திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று காலை செய்யப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆர்.எஸ். பாரதியின் கைதுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்  தெரிவித்திருந்தன. அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “திமுக அமைப்பு செயலாரும், மாநிலங்களை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கட்சி அரங்குகளில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் சர்ச்சையை எழுப்பி, அதையொட்டி அடிப்படை ஆதாரமற்ற பொய் வழக்கை ஜோடித்து கைது செய்திருப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியாளர்களில், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். இந்தப் புகார்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஊழலில் ஊறி திளைத்த அதிமுக ஆட்சியாளர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்திருக்கிறார். இவரது செயல்பாடுகளை முடக்கி, மன உளைச்சல் ஏற்படுத்துவதற்காக இத்தகைய அடக்குமுறையை அவர் மீது ஏவி விடப்பட்டு இருக்கிறது.


பட்டியலின மக்களின் பாதுகாவலனாக தம்பட்டம் அடித்து கொள்வதற்காக அதிமுக அரசு, ஆர்.எஸ். பாரதி மீது பொய் வழக்கு புனைந்திருக்கிறது. ஆதாரமற்ற முறையில் ஜோடிக்கப்பட்டு ஆர்.எஸ். பாரதி மீது தொடுக்கப்பட்டிருக்கிற வழக்கை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!