காங்கிரஸ் கே.எஸ். அழகிரி vs பாஜக குருமூர்த்தி மோதல்..! கமலாலயம் உண்மை வெளிவரும்.. கேஎஸ்.அழகிரி எச்சரிக்கை.!!

By T BalamurukanFirst Published Jul 19, 2020, 7:56 PM IST
Highlights

காங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடை வந்திருப்பதை பாஜக பிரமுகர் ஜெ.பி. நட்டா அதிரடியாக ஒரு புயலை கிளப்பியிருந்தார். அவர் கொளுத்திப்போட்ட தீ இன்று வரைக்கும் கொளுந்தாய் எரிந்து கொண்டிருக்கிறது. கே.எஸ். அழகிரியும்  ஆடிட்டர் குருமூர்த்தியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி மோதிக்கொள்ளும் சம்பவம் தீ பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடை வந்திருப்பதை பாஜக பிரமுகர்  நாட்டா அதிரடியாக ஒரு புயலை கிளப்பியிருந்தார். அவர் கொளுத்திப்போட்ட தீ இன்று வரைக்கும் கொளுந்தாய் எரிந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் முயற்சிப்பதாக துக்ளக் இதழினின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இவர்களது இந்தக் குற்றச்சாட்டை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி மறுப்பதோடு பாஜக "கமலாலயம்" வந்த உண்மையை வெளியிட வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நன்கொடை வந்திருப்பதை பாஜக பிரமுகர்  நாட்டா அதிரடியாக ஒரு புயலை கிளப்பியிருந்தார். அவர் கொளுத்திப்போட்ட தீ இன்று வரைக்கும் கொளுந்தாய் எரிந்து கொண்டிருக்கிறது.


"தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்களை நியமிக்க, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கே அதிகாரம் இருக்கிறது என்றாலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னிச்சையாக அறக்கட்டளையின் அறங்காவலர்களை நியமித்துள்ளார்.இதனை தொடர்ந்து, இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உதவியாளர் இந்த அறக்கட்டளையின் சொத்துக்களை கட்டுப்படுத்தி வருகிறார்" என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

"அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரம் குறித்து கேஎஸ். அழகிரி கூறும்போது, "எந்தவித ஆதாரமும் இல்லாமல் காங்கிரஸ் அறக்கட்டளை குறித்து குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். நான் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அறக்கட்டளை குறித்து ஒருமுறைகூட சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் என்னிடம் கேட்டதில்லை. அதில் அவர்கள் ஒருபோதும் தலையிட்டதில்லை.அறக்கட்டளையின் உறுப்பினர்களை சோனியா காந்தி ஒருபோதும் தன்னிச்சையாக நியமிக்கவில்லை. அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள எந்த நிறுவனத்திடமும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.எங்கள் மீது வீண் பழி சுமத்தினால் குருமூர்த்தி பற்றியும், தமிழக பாஜக அலுவலகமான 'கமலாலயம்' அமைந்துள்ள இடம், அதன் உரிமையாளரை மிரட்டி எப்படி வாங்கப்பட்டது என்பது குறித்தும் நாங்கள் பேசவேண்டியிருக்கும்" என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!