கட்சிக்குள்ளே கலவரம் கடுகடுப்பில் காங்கிரஸ்.! குஷ்பூ போட்ட ட்விட். அழகிரி கண்டனம்.!

By T BalamurukanFirst Published Jul 31, 2020, 9:47 AM IST
Highlights

புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்., தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, 'தலைமைக்கு தலையை ஆட்டும் பொம்மை நான் இல்லை' அதற்காக நான் பாஜகவிற்கு செல்லப்போவதில்லை. என் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாக பேசுகிறேன் அவ்வளவுதான். என்று நடிகை குஷ்பூ ட்விட்டரில் அதிரடியாக கருத்துக்களை பதிவு செய்து அதிரவிட்டிருந்தார்

புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்., தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, 'தலைமைக்கு தலையை ஆட்டும் பொம்மை நான் இல்லை' அதற்காக நான் பாஜகவிற்கு செல்லப்போவதில்லை. என் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாக பேசுகிறேன் அவ்வளவுதான். என்று நடிகை குஷ்பூ ட்விட்டரில் அதிரடியாக கருத்துக்களை பதிவு செய்து அதிரவிட்டிருந்தார்.


34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில், சில மாற்றங்களை செய்து  மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அறிவித்துள்ளது. தமிழகம் கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கை திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, அன்புமணி எம்.பி. உள்ளிட்டோர் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி... 'கட்சிக்கு வெளியே கருத்து கூறுவது ஏதோ லாபம் எதிர்ப்பார்ப்பது போல் உள்ளது என குஷ்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தனது டுவிட்டரில் பதிவில்..

"கொரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது  ஜனநாயத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கின்றனர்.காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு;கட்சியின் அமைப்புக்குள் பேசினால் வரவேற்பு உண்டு; வெளியில் பேசினால் அதன்பெயர் முதிர்ச்சியின்மை.ஒழுக்கமின்மை விரக்தியிலிருந்து வருகிறது. குணப்படுத்த யோகா சிறந்த மருந்து. என கூறி இருக்கிறார்.


 

click me!