காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது நியாயமா..? அதகளப்படுத்தும் விடுதலைச் சிறுத்தைகள்..!

By Asianet TamilFirst Published Feb 21, 2019, 1:54 PM IST
Highlights

காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை காங்கிரஸார் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் திமுக தொண்டர்களின் அதிருப்தியும் வெளிப்பட்டிருக்கிறது. இந்நிலையில், “காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது நியாயமானது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளை திமுக வழங்கியது நியாயமானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் சீட்டு ஒதுக்கப்படும் என்று பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கப்பட்டுவந்தன. குறைந்தபட்சமாக 2004-ல் வழங்கியதுபோல 10 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. இதை ஏற்றுக்கொண்ட திமுக, புதுச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கியது. 

காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை காங்கிரஸார் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் திமுக தொண்டர்களின் அதிருப்தியும் வெளிப்பட்டிருக்கிறது. இந்நிலையில், “காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது நியாயமானது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது நியாயமானது. இந்தியாவில் முதன் முறையாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தார். பிரதமராக முன்மொழிந்த கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் சீட்டு ஒதுக்கினால் நன்றாக இருந்திருக்காது. அந்தவகையில் இரட்டை இலக்கத்தில் காங்கிரஸுக்கு சீட்டு வழங்கியது நியாயமானதுதான்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதுபோல விடுதலைச் சிறுத்தைகளுடன் உடன்பாடு ஏற்பாடு என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டன. இந்த முறையும் இரண்டு தொகுதிகளை திமுகவிடன் விசிக கேட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!