குமாரசாமியை தெறிக்க விடணும்! மாண்டியாவில் ஒன்றாகச் சேர்ந்து மாஸ்டர் பிளான் போடும் பாஜக, காங்கிரஸ்!

By SG Balan  |  First Published Apr 18, 2023, 5:53 PM IST

முன்னாள் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிட்டால் அவரை தோற்கடித்தே தீருவது என்று பாஜகவும் காங்கிரஸும் தனித்தனியே வியூகம் அமைத்துள்ளன.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், மாண்டியா தொகுதியில் தனி கவனம் பெற்றுள்ளது. மாண்டியா தொகுதியில் யார் வேட்புமனு தாக்கல் செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மிகவும் சுவாரஸ்யமானதாக உள்ளது. மாநிலத்தின் மூன்று முக்கிய கட்சிகளிலும் அந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி இறுதிக்கட்டத்தில் மண்டியாவில் போட்டியிட வாய்ப்புள்ளது என்பதை அறிந்த காங்கிரஸும் பாஜகவும் அவரை வீழ்த்த மாஸ்டர் பிளான் தயாரித்துள்ளன.

மாண்டியா தொகுதியில் குமாரசாமி நிறுத்தப்பட்டால், அவரை வீழ்த்துவதற்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே மிகுந்த முனைப்புடன் காத்திருக்கின்றன. இதற்காக கட்சியில் பிரபலமான தலைவர்களை பி ஃபார்மில் களமிறக்க திட்டம் போட்டுள்ளன. ஏற்கனவே பாஜக அசோக் ஜெயராமுக்கும், காங்கிரஸ் ரவி கனிகாவுக்கும், ஜேடிஎஸ் எம். ஸ்ரீனிவாஸுக்கும் மாண்டியா தொகுதியை வழங்கியுள்ளன. ஆனால், பி பார்ம் வழங்கப்படவில்லை.

Tap to resize

Latest Videos

போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

காங்கிரஸ் வியூகம்

முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யாவை மாண்டியா தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்று காங்கிரஸ் கணக்கு போட்டுள்ளது. பெரும்பாலும் ரம்யா மாண்டியாவில் களமிறக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ரம்யா போட்யிட முன்வராவிட்டால் மற்றொரு முன்னாள் எம்பி செல்வராயசாமியை களமிறக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் இல்லாவிட்டால் தினேஷ் கூலிகவுடாவுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கட்சிக்குள் விவாதம் நடந்து வருகிறது. மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூன்று பேரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

பாஜகவின் பிளான்

குமாரசாமி சென்னப்பட்டினம் தொகுதியில் பாஜகவின் சி.பி. யோகேஷ்வர் எதிர்த்துப் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் யோகேஷ்வருக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதால் அவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதனால்தான் ஹெச்.டி. குமாரசாமி மாண்டியாவிலும் களமிறங்குகிறார்.

ஆனால் மாண்டியாவிலும் எச்.டி.கே.,க்கு எதிராக பாஜக மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறது. மாண்டியா தொகுதியில் தற்போதைய எம்பியும் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தவருமான சுமலதாவை களமிறக்க திட்டமிட்டுள்ளது. சுமலதாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுவதில் இருந்து இந்த முடிவு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பது தெளிவாகிறது. தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. 

வேட்புமனு தாக்கல்

குமாரசாமி வரும் வியாழக்கிழமை மாண்டியாவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. 2.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே வியாழக்கிழமை காலை சுமலதாவின் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மாண்டியாவில் இருந்து போட்டியிட சுமலதா கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அவர் பாஜகவின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராகக்கூட களமிறங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி சுமலதா சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

யார் இந்த ஜெகத்ரட்சகன்.?அரசியலில் உயர்ந்தது எப்படி? சொத்து மதிப்பு என்ன தெரியுமா? தலை சுற்றவைக்கும் தகவல்கள்

ட்விஸ்ட் வருமா?

காங்கிரஸ் மற்றும் பாஜகவின் இந்தத் திட்டங்கள் எல்லாம் குமாரசாமி மாண்டியாவில் போட்டியிடுவதை பொறுத்துதான். எச்டிகே போட்டியிடவில்லை என்றால் போட்டி காங்கிரஸ் - பாஜக இடையேயான இருமுனை போட்டியாக மாறிவிடும். காங்கிரஸிலிருந்து ரவி கனிகாவும் பாஜகவின் அசோக் ஜெயராமும் அதற்குத் தயாராக உள்ளனர். மாண்டியாவில் திட்டமிட்டபடி குமாரசாமி வேட்புமனு தாக்கல் செய்கிறாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் வரும் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் கர்நாடக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது.

Explained: சூடான் நாட்டின் சர்வாதிகாரி ஒழிந்தார்; அதிகார போதை ஒழிந்ததா? சூறையாடப்படும் ஏழை நாடு; காரணம் என்ன?

click me!