இனிமேலாவது திருந்துங்க... பாஜகவை வறுத்தெடுத்த கனிமொழி..!

By vinoth kumarFirst Published Feb 11, 2020, 6:21 PM IST
Highlights

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 21 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது.  

வெறுப்பு அரசியல் வேண்டாம் என்று சொல்வதுபோல் டெல்லி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். 

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 21 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது.  

இதையும் படிங்க;- அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைகிறார்... அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்..!

தொடக்க முதலே பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வந்தது. தற்போது நிலவரப்படி ஆம் ஆத்மி 63 தொகுதிகளிலும், பாஜக 07 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 53.6 சதவீத வாக்குகளும், பாஜக 40.02 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.45 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளது.  இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தலைவர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி  கூறுகையில்;- வெறுப்பு அரசியல் வேண்டாம் என்று சொல்வதுபோல் டெல்லி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. டெல்லியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

click me!