அசாம், அருணாச்சல் இடையே இணக்கம் நெருக்கமானது - புதிய பாலத்தை திறந்து மோடி பேச்சு

First Published May 26, 2017, 12:31 PM IST
Highlights
Compliance between Assam and Arunachal is close - Modi talks to open a new bridge


அசாம் - இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரம்மபுத்திரா நதி உள்ளது. இதனால், அந்த பகுதியை கடந்து செல்ல பல மணி நேரம் ஆனது. இதையொட்டி பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.


இதைதொடர்ந்து அசாம்  மாநிலத்தில் இருந்து இமாச்சல பிரதேசம் மாநிலத்துக்கு பிரம்மபுத்திரா ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.


அதன்படி தின்சுகியா மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ தூரத்துக்கு கட்டப்பட்ட புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:-


அசாம் மாநிலத்தில் முதல் தரமான இஞ்சி கிடைக்கிறது. இங்குள்ள விவசாயிகள், தங்களது பயிர்களை சிரமம் இல்லாமல், இந்த பாலம் வழியாக கொண்டு சென்று, விற்பனை செய்யலாம். இதனால், 4 மணி நேரம் வரை குறையும்.


இதன் மூலம் அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலத்த்துக்கு இடையே ஒரு இணக்கத்தை இந்த பாலம் நெருக்கமாக்கியுள்ளது. பொருளாதார புரட்சிக்கு வழி வகுத்துள்ளது.


நாட்டின் கனவுகளை மெய்ப்பட செய்ய நாங்கள் போராடி வருகிறோம். இந்திய நாட்டின் வளர்ச்சிக்கான தேவைகள் அனைத்தும் வடகிழக்கு மாநிலங்களில் அமைந்துள்ளது.


இத்தனை நாள் மாநிலங்களை இணைக்கும் பிரச்சனை இழுத்து கொண்டே சென்றது. ஆனால், இன்று இந்த புதிய பாலத்தால், அந்த பிரச்சைனை தீர்ந்துள்ளது.


நாட்டில் சாலை போக்குவரத்து செயல்படுவதை போல், கடல் வழி பாதையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இந்த நீரமைப்பு திட்டத்தையும், பிரம்ம புத்திரா வழியாக இணைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!