அம்மா நான் செஞ்சது தப்புதான்.. மன்னிச்சிடுங்க... பழத்தை கொட்டிவிட்டு நேரில் ஓடிப்போய் மன்னிப்பு கேட்ட ஆணையர்.!

Published : May 13, 2020, 03:07 PM IST
அம்மா நான் செஞ்சது தப்புதான்.. மன்னிச்சிடுங்க... பழத்தை கொட்டிவிட்டு நேரில் ஓடிப்போய் மன்னிப்பு கேட்ட ஆணையர்.!

சுருக்கம்

வாணியம்பாடியில் பழவண்டிக்கடைகளை கவிழ்த்து விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஆணையருக்கு நிறைய கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் நேரிலே சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.  

வாணியம்பாடியில் பழவண்டிக்கடைகளை கவிழ்த்து விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஆணையருக்கு நிறைய கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் நேரிலே சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சில தொழில்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பின்பு இந்த தளர்வுகள் பாதிக்கப்பட்ட இடங்களில் செல்லுபடியாது என்று பின்பு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வானியபாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். இதைப்பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்கிருக்கும் பழவண்டிகளை தள்ளிவிட்டும், பழங்களை தூக்கி எரிந்தும் கடைகளை திறக்கக்கூடாது என்று கடுமையாக கண்டித்துள்ளார். இவர் இப்படி நடந்ததை அடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் ரவுடி போல ஒரு ஆணையர் செயல்படுவதா என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்பேடு போல வாணியம்பாடி ஆகக்கூடாது என்றுதான் நான் விரும்பினேன்.  அதுமட்டுமில்லாமல், நான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்ததோடு வியாபாரிகளை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு இழப்பீட்டை வழங்கினார். 

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு