
முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிக்கொண்டிருக்கும் இதில், பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் அரசியல் கட்சித் தலைவர்களாக வருகின்றனர். இவர்களை மக்களில் ஒருவராக இருந்து எதிர்க்கும் பணியை விஜய்யின் கேரக்டர் செய்கிறது.
சமீபத்தில் வெளியான படங்கள் குறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, இரு அரசியல் எதிரிகளை ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் விஜய்யைச் சமாளிக்க இவர்கள் இருவரும் சேரும் படத்தின் முக்கியமான சில காட்சிகள் படமாக்கப்படுவதாகக் தெரிகிறது.
கமர்ஷியல் சினிமா எடுத்துக்கொண்டிருந்தபோதே, அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களையும், சாட்டையடி அடிக்கும் சமூக அக்கறையுடன் கூடிய காட்சிகளையும் வைத்து படமெடுத்த முருகதாஸ் மக்கள் நலன் என்பதன் அடிப்படையில் எதையும் எதிர்க்கத் தயாராகிவிட்ட விஜய்யைச் சாதாரணமாகக் கையாள்வாரா? பார்க்கலாம்...