கல்லூரிகள் திறப்பு எப்போது? புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Nov 30, 2020, 11:56 AM IST
Highlights

தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் டிசம்பர் இறுதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ம் தேதி முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றித் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.  மாணவர்களுக்காக விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ( இளநிலை மற்றும் முதுகலை வகுப்புகள்) டிசம்பர் 7ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. 2020-21 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள், 1.2.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே நவம்பர் 16ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி அவை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தது.  இந்த சூழலில் மீண்டும் கல்லூரிகளைத் திறக்க அனுமதிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

click me!