கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கக் கூடாது... திமுக கூட்டணி கட்சிகளை அலறவிடும் உதயநிதி ஸ்டாலின்..!

Published : Jan 11, 2021, 10:08 PM IST
கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கக் கூடாது... திமுக கூட்டணி கட்சிகளை அலறவிடும் உதயநிதி ஸ்டாலின்..!

சுருக்கம்

திமுக வெற்றி உறுதியான தொகுதிகளை கூட்டணிக்கு கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திமுக அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் நானும் கூறியிருக்கிறேன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் படத்திறப்பு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்று பேசினார். “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கடந்த 20 நாட்களில் தமிழகத்தில் 50 தொகுதிகளில் பிரசாரம் செய்து முடித்துவிட்டேன். அங்கெல்லாம் திமுக தொண்டர்கள் நிறைய தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது என்றனர். திமுக வெற்றி உறுதியான தொகுதிகளை கூட்டணிக்கு கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் திமுக அதிக அளவில் போட்டியிட வேண்டும் என தலைவரிடம் நானும் கூறியிருக்கிறேன்.
தற்போதுள்ள சூழலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். சென்னையில் உள்ள தியாகராய நகர், மயிலாப்பூர் இரண்டு தொகுதியிலும் திமுக போட்டியிடும் என நான் உறுதியளிக்கிறேன். தலைவரிடம் அனுமதி பெறாமலேயே இதை கூறுகிறேன். நான் வெறும் ட்ரெயிலர்தான். திமுக தலைவர் வரும்போது அதிமுகவினர் துண்ட காணோம் துணிய காணோம் என ஓடப்போகிறார்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!