மதுரையில் இருந்து விரட்டப்பட்டு தேனியிலும் தடுக்கப்பட்ட ஓ.பி.எஸின் தம்பி... ஓ.பி.ராஜாவுக்கு வந்த திடீர் சோதனை..!

By vinoth kumarFirst Published Sep 12, 2019, 2:49 PM IST
Highlights

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா செயல்பட்டு வந்தார். இது தொடர்பாக அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 

இந்நிலையில், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா செயல்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக்குழு ஆகிய இரண்டு செயல்பட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்தி, பால்வள மேம்பாட்டுத்துறை பதிவாளர், ஓ.ராஜா உள்ளிட்ட 17 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

click me!