அந்த சாவுக் கணக்கையெல்லாம் யாரு கணக்குல எழுதறதுங்க சாமீ...? முதல்வரிடம் ஒரு கேள்வி..!

By Vishnu PriyaFirst Published Apr 29, 2019, 3:42 PM IST
Highlights

காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளால் நாடு சிதைந்தது மட்டுமில்லாமல், மக்களும் அல்லல்பட்டனர். ஆனால் பி.ஜே.பி. அரசு தேசத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது: யோகி ஆதித்யநாத்.

* சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே. நான் ஊழல் செய்வதாக புகார் வந்தால் என் வீட்டிலும் சோதனை நடத்தலாம்: நரேந்திர மோடி. (ஹ்ஹா...செம்ம தமாசு தல. ஆனா ஒண்ணு தல உங்களை மாதிரி மூஞ்சியில சிரிப்பே இல்லாம ஜோக்கடிக்க இன்னொருத்தன் பொறந்து வரணும். போன தடவையாச்சும் இந்த மாதிரி சீன்ஸையெல்லாம் பார்த்து நம்புனானுங்க. ஆனா கெரகம் இப்போ ரொம்பக் கேவலமா உங்க ட்விட்டர்லேயே ரிவிட் அடிக்குறானுங்க.)

* நண்பரை போலீஸில் சிக்க வைக்க, ரயில்வே ஸ்டேஷனில் அவர் குண்டு வைக்க இருப்பதாக புரளி கிளப்பிய நபர் கைது: செய்தி. (நண்பேன் டா!............வேற என்னத்த சொல்லுறது?)

* சுங்கச் சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச்சலுகை ரத்து நடவடிக்கை மீண்டும் அமலுக்கு வந்திருப்பது கடும் கண்டத்துக்கு உரியது: ஜி.கே.வாசன். (தலைவர் ரொம்ப ஃப்ரீயா உட்கார்ந்திருக்கீங்க வீட்லன்னு நன்னா புரியுறது. ஏதாச்சும் அறிக்கை விடோணும் அப்படிங்கிறதுக்காக இப்படியெல்லாம் ஒரு கட்சியோட மாநில தலைவரே அறிக்கை விட்டீங்கன்னு வெய்யுங்க, அப்புறம் விடியல்சேகர், கோவை தங்கமெல்லாம் எங்க தல போவாங்க?  ‘ராயபுரம் மூன்றாவது வார்டில் கொசு தொல்லை’ன்னா ஞானதேசிகனாலே அறிக்கை விட முடியும்? ரொம்பக் கேவலமா இருக்குமே அந்த நிலைமை.)

* போனி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை. ஆந்திரா பகுதிகளில்தான் கரையை கடக்கும். தமிழத்தில் சில இடங்களில் மிதமான மழை இருக்கலாம்: சென்னை வானிலை ஆய்வு மையம். (டியர் ஆபீஸர்ஸ், நீங்க இருக்குறப்ப நாங்க ஏன் புயல் பத்திக் கவலைப் படுறோம்? ‘புயல் சின்னம் உருவாகிறது. தமிழகத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு’ன்னு நீங்க சொன்னதுமே நாங்க முடிவு பண்ணிட்டோம்...சரி வெயில் வெளுத்து வாங்க போவுதுன்னு! அதானே நடக்குது. அதனால கவலையே வேண்டாம், வழக்கம்போல் சொதப்புங்க.)

* காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளால் நாடு சிதைந்தது மட்டுமில்லாமல், மக்களும் அல்லல்பட்டனர். ஆனால் பி.ஜே.பி. அரசு தேசத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது: யோகி ஆதித்யநாத் (ஆமாஞ்சாமி உத்திரபிரதேசம் மெயின்ரோடுல பான்பராக் போட்ட சேட்டு ஒருத்தரும் இதையேதான் சொன்னாரு. ஆனா நீங்க உ.பி.யில ஆட்சிக்கு வந்து உட்கார்ந்த சில மாசங்கள்ள கவர்மெண்டு ஆஸ்பத்திரியில ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் கொத்துக் கொத்தா பச்சக் குழந்தைங்க செத்துப் போச்சே. அதை எந்த கணக்குல எழுதுறது சாமீ?)

click me!