முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைவார்: டாக்டர் கிருஷ்ணசாமி

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 02:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைவார்: டாக்டர் கிருஷ்ணசாமி

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இன்று சென்றார்.

கடந்த 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனை சென்றார். மருத்துவமனை சென்று திரும்பிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைவார் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி சார்பாகவும், என் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று  மீண்டும் அரசு பணிகளை மேற்கொள்ள வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!