அதிமுகவின் லட்சோப லட்சம் தொண்டர்களின் கவலை விரைவில் நீங்கும் - அப்போலோவில் வைகோ பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 02:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
அதிமுகவின் லட்சோப லட்சம் தொண்டர்களின் கவலை விரைவில் நீங்கும் - அப்போலோவில் வைகோ பேட்டி

சுருக்கம்

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்று  பார்த்தார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேலிடம் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த வைகோ பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது. முதல்மைச்சர் ஜெயலலிதா பூரண நலமாக இருக்கிறார். பூரண நலம் ப்றும் வகையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அதிமுகவின் தொண்டர்கள் புரட்சித்தலைவரின் லட்சோப லட்ச தொண்டர்கள் 23 ஆம் தேதி காலை முதல் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அவர்கள் கவலைகள் விரைவில் நீங்கும் , முதல்வர் முழு உடல் நலத்தோடு இல்லம் திரும்புவார். இன்று தமிழகத்தில் கவலை ஏற்படுத்தக்கூடிய காவிரி பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா முறைப்படி உச்சநீதிமன்றம் வரை அணுகி பாதுகாத்து கொடுத்தார்.

நான் மருத்துவர்களிடம் பேசினேன், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன். லண்டன் மருத்துவர் ரிச்ச்ர்ட் பேலை சந்தித்தேன், நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளோம் இரண்டு முறை சென்னை வந்து சிகிச்சை அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.

தமிழக முதலமைச்சர் உங்களைப்போன்ற உயர்ந்த மருத்துவர்கள் சிகிச்சையால் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினேன். முதல்வர் நலமாக இருக்கிறார். முழு உடல் நலம் பெற்று இல்லம் திரும்புவார் . இவ்வாறு வைகோ கூறினார்.

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!