
முதல் நாள் சட்டமன்ற கூட்டம் இன்று கூடியுள்ள் நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தமிமூன் அன்சாரி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களைக் கொண்ட சின்ன பேனரை கையில் பதாகை போல் தூக்கி வந்தார். சட்டமன்ற வருகையே தடாலடியாக இருந்த நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தார் முதல்வர்.
தூத்துகுடி சம்பவம் தொடர்பான ஐந்து பக்க விவர அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. வன்முறையை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். நெருக்கடி கொடுக்க சில அமைப்புகள் சட்ட ஒழுங்கு பிரச்சனை முன்னெடுத்தன. கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி நட்த்தியும் கூட்டம் கலையாததால் நடவடிக்கை. போராட்ட குழுவினருடனர் சில அரசியல் கட்சிகளும் கை கோர்த்தன. சிசிலர் ஊடுருவி கல்லெறிதல் வாகனத்திற்கு தீ வைத்தல் போன்ற செயல்களை செய்தனர். தூத்துக்குடியில் அமைதி நிலவ மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில் ’துப்பாக்கி சூடு’ என்கிற வார்த்தை அறிக்கையில் இடம்பெறவே இல்லை. மாறாக காவல்துறையின் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார். இதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையோ அல்லது காயமுற்றவர்களின் எண்ணிக்கையோ குறிப்பிடவில்லை.
துப்பாக்கி சூடு என்பதைகூட குறிப்பிட்த்தை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டன்ங்களை தெரிவிக்கின்றனர்